You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

சின்னம்மை நோயில் இருந்து பாதுகாக்கும் பலனளிக்கும் மற்றும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியாக இது விளங்குகிறது.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களை சின்னம்மை நோய் மிகவும் கடுமையாகப் பாதிக்கும்.
  • சின்னம்மை நோய் நிமோனியா மற்றும் மூளையழற்சி போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.
தாமதிக்கவேண்டாம்!

சின்னம்மைத் தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

சின்னம்மை நோய் என்றால் என்ன?

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) வேரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் கடுமையான தொற்றுநோயாகும். குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் கொண்டவர்களை இது தீவிரமாகப் பாதிக்கலாம்.

இது வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது. அரிக்கும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. மார்பில் தோன்றும் பொக்களம் பின்னர் பின்புறம், முகம் மற்றும் இறுதியாக உடல் முழுவதும் பரவுகிறது. காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை பிற அறிகுறிகளில் அடங்கும்.

சின்னம்மை நோய் (வேரிசெல்லா) எவ்வாறு பரவுகிறது?

இந்த வைரஸ் சிக்கன் பாக்ஸ் உள்ளவர்களிடமிருந்து இதுவரை இந்த நோய் ஏற்படாத அல்லது தடுப்பூசி போடப்படாத மற்றவர்களுக்கு பின்வரும் முறைகளில் எளிதில் பரவுகிறது-

வெடித்த கொப்பளங்களோடு ஏற்படும் நெருங்கிய தொடர்பு-

பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது
தாயிடம் இருந்து பிறக்காத குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக

சின்னம்மை நோயின் (வேரிசெல்லா) அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் என்னென்ன?

அறிகுறிகளில் அடங்குவன:

லேசானது முதல் கடுமையான காய்ச்சல்

பசி இல்லாமை

அரிப்பு திரவம் நிறைந்த கொப்புளங்களாக மாறுதல்

கொப்புளங்கள் இறுதியில் சிரங்குகளாக மாறும்

சின்னம்மை நோயின் தீவிரமான ஆனால் அரிதான சிக்கல்களில் பாக்டீரியா சூப்பர் இன்ஃபெக்ஷன்கள், வடுக்கள், நிமோனியா, மத்திய நரம்பு மண்டலத்தின் வெளிப்பாடுகள், இரத்தக் கசிவுப் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.
சின்னம்மை நோயால் எழும் சிக்கல்கள் சிலருக்கு கடுமையான நோயை ஏற்படுத்தலாம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். சிக்கன் பாக்ஸால் அரிதாக மரணமும் நிகழலாம்.

ஒரு குழந்தைக்கு சின்னம்மை நோய்த் தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

குழந்தைகளுக்கு இரண்டு டோஸ்கள் போடப்பட வேண்டும்:

  • 15 மாதங்களில் முதல் டோஸ்
  • 18 முதல் 21 மாதங்களுக்கு இடையில் 2 வது டோஸ்

யாரேனும் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களைத் தவற விட்டுவிட்டால், எப்பொழுதும் கேட்ச்-அப் தடுப்பூசியைத் தேர்வு செய்யலாம்.
இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

சின்னம்மை நோய்த் தடுப்பூசியுடன் தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் என்ன?

மிகவும் பொதுவான பக்க விளைவுகள் பெரும்பாலும் லேசானவை மற்றும் அவை தானாகவே போய்விடும்.

பொதுவான பக்க விளைவுகள்:

  • தடுப்பூசி போட்டதால் முன்கையில் புண்
  • காய்ச்சல்
  • ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான சொறி
  • மூட்டுகளில் தற்காலிக வலி மற்றும் விறைப்பு

தடுப்பூசிக்குப் பிந்தைய கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் அரிதானவைகளாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தானவை.

கடுமையான ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகளில் பலவீனம், தலைச்சுற்றல், வேகமான இதயத் துடிப்பு, சுவாசிப்பதில் சிரமம், முகம் மற்றும் தொண்டை வீக்கம் மற்றும் படை நோய் ஆகியவை அடங்கும்.

அத்தகைய எதிர்வினைகள் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகவும் அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும்.

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரை அணுகவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கும் என் குழந்தைக்கும் சின்னம்மை நோய் (வேரிசெல்லா) ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?

சின்னம்மை நோய் மருத்துவமனை சிகிச்சை, மருத்துவரிடம் செல்லுதல், மருந்துகள் மற்றும் குடும்பத்தினருக்குத் துன்பம் போன்ற குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதார மற்றும் சமூகச் சுமைகளை ஏற்படுத்தலாம்..

சின்னம்மை நோய் உள்ள குழந்தைகள் சராசரியாக 5-6 நாட்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது மற்றும் பெற்றோர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தையைப் பராமரிப்பதற்காக 3-4 நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாது.

சின்னம்மை நோய்க்கு (வெரிசெல்லா) எதிராக எனது குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

பின்வரும் முறைகளில் சின்னம்மை நோய் வராமல் தடுக்கலாம்:

  • தடுப்பூசி (வேக்சினேஷன்)
  • பாதிக்கப்பட்ட நபரை நெருங்காமல் இருத்தல்
  • தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள துணிகளை அல்லது படுக்கையை தவறாமல் சுத்தம் செய்தல்

என் குழந்தைக்கு சின்னம்மை நோய்க்கான தடுப்பூசியை எந்த வயதில் போட வேண்டும்?

15 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளுக்குச் சின்னம்மை தடுப்பூசி போடலாம். பரிந்துரைக்கப்பட்ட காலத்தில் குழந்தைக்குத் தடுப்பூசி போடத் தவறினால், 18 வயது வரை தடுப்பூசி போடலாம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவலுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

சின்னம்மை தடுப்பூசியை யாருக்குப் போடக்கூடாது?
  • சின்னம்மை தடுப்பூசியின் முந்திய டோஸ் அல்லது தடுப்பூசியின் ஏதேனும் குறிப்பிட்ட கூறுகளுக்கு எதிராகக் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்விளைவுகளை அனுபவித்தவர்கள்.
  • சின்னம்மை தடுப்பூசி போடும் போது நோய்வாய்ப்பட்டவர்கள்.
  • போடப்படுபவருக்கு பின்வரும் நிலையில் இருந்தால் மருத்துவரிடம்
  • ஆலோசிக்கவும்:

எச்ஐவி/எய்ட்ஸ் அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் வேறு

ஏதேனும் நோய் உள்ளவர்கள்

ஸ்டெராய்டுகள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும்

மருந்துகளைக் கொண்டு 2 வாரங்கள் அல்லது அதற்கு மேலும் சிகிச்சை பெற்று வருபவர்

ஏதாவது ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்

மருந்துகள் அல்லது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்

சமீபத்தில் இரத்தமாற்றம் செய்யப்பட்டவர் அல்லது பிற இரத்த பொருட்களைப் பெற்றவர்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பெற திட்டமிடும் பெண்கள்.

*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன் சின்னம்மைத் தடுப்பூசி போட வேண்டும்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker