You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

ஹெப்படிடிஸ் A வைரசால் ஏற்படும் கல்லீரல் தொற்று நோயே ஹெப்படிடிஸ் ஏ(கல்லீரல் தொற்று ஏ) ஆகும். இது மிகவும் தீவிரமாகப் பரவும் தொற்று நோய். அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மூலம் இது பரவுகிறது.

ஹெப்படிடிஸ் A தொற்றைத் தடுக்கும் ஒரே நம்பகமான வழி வேக்சினேஷன் மட்டுமே.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

ஹெப்படைடிஸ் ஏ என்றால் என்ன?

ஹெப்படைடிஸ் ஏ என்பது ஹெப்படைடிஸ் ஏ வைரஸால் ஏற்படும் பரவும் கல்லீரல் தொற்று நோய் ஆகும். அதன் தீவிரம் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், இது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை நீடிக்கும்.

ஹெப்படைட்டிஸ் ஏ எவ்வாறு பரவுகிறது?

பொதுவாக மலத்தால் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை ஒருவர் உட்கொள்ளும் போது இந்த நோய் பரவுகிறது.

ஹெப்படைட்டிஸ் ஏ அறிகுறிகள் என்ன?

பாதிக்கப்பட்ட அனைவருக்குமே அறிகுறிகள் இருப்பதில்லை. அறிகுறிகள் (முன்னேறியிருந்தால்) பொதுவாக நோய்த்தொற்றுக்குப் பிறகு 2 முதல் 4 வாரங்களுக்குள் தோன்றும்.

பின்வருபவைகளில் அறிகுறிகள் அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல-

  • காய்ச்சல்
  • வாந்தி
  • சாம்பல் நிற மலம்
  • சோர்வு
  • வயிற்றுவலி
  • மூட்டு வலி
  • பசி இல்லாமல் இருப்பது
  • குமட்டல்
  • மஞ்சள் காமாலை
  • அடர் சிறுநீர்

ஞாபகத்தில் வைக்கவும்:

குழந்தைகளுடன் வைத்து ஒப்பிடும்போது, ​​நோயின் தீவிரம் மற்றும் அபாயகரமான விளைவுகள் பெரியவர்களுக்கு அதிகமாக இருக்கும்

ஒரு குழந்தைக்கு ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசியை எப்போது போட வேண்டும்?

குழந்தைகளுக்கு 12 மாதத்தில் இருந்து ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசியைப் போடலாம். வெவ்வேறு ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசிகள் வெவ்வேறு அட்டவணைகளைக் கொண்டுள்ளன.

ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசி பற்றிய தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசியுடன் தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் என்ன?

ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசிகளினால் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஏற்படும் பக்க விளைவுகளில் சில.

  • காய்ச்சல்
  • சிவத்தல்
  • தலைவலி
  • பசியின்மை
  • பொதுவான உடல்நலக்குறைவு

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நோய் ஏற்படும் ஆபத்து யாருக்கெல்லாம் இருக்கிறது?

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது இதற்கு முன் நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவரும் ஹெப்படைட்டிஸ் ஏ வைரஸால் பாதிக்கப்படலாம்.

இந்தியாவில் ஹெப்படைட்டிஸ் ஏ எவ்வளவு பரவலாகக் காணப்படுகிறது?

உலகம் முழுவதும் ஹெப்படைட்டிஸ் ஏ நோய் காணப்படுகிறது. இந்தியாவில் இது பரவலாக உள்ளது. சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காரணமாக, சில குழந்தைகளுக்கு சிறு வயதில் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை, இதனால் பின்னர் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வாய்ப்பிருப்பதில்லை. எனவே, அதிக எண்ணிக்கையிலான வளரிளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. இந்த வயதினருக்கு நோய்த்தொற்று கடுமையாக இருக்கும். வேலை மற்றும் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். ஹெப்படைட்டிஸ் A இன் தீவிரம் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் கடுமையான கல்லீரல் செயலிழப்பு அல்லது இறப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ஹெப்படைட்டிஸ் ஏ – யில் இருந்து எனது குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

பின்வரும் வழிகளில் ஹெப்படைட்டிஸ் ஏ தொற்றிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்கலாம்:

  • சுத்தமான தண்ணீரை அருந்துவது, வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் சிறந்த சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலமும் பாதுகாக்கலாம்.
  • ஹெப்படைட்டிஸ் ஏ தடுப்பூசி போடுதல்

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker