You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

ஹெப்படைடிஸ் B வைரஸால் ஏற்படும் தொற்று நோயே ஹெப்படைடிஸ் பி ஆகும். இதைத் தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • 6 வயதிற்குள் பாதிப்புக்குள்ளான மூன்று குழந்தைகளில் ஒன்றுக்கு நாள்பட்ட (நீண்ட கால) ஹெப்படைடிஸ் பி உருவாகும் அபாயம் உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில் உலக அளவில், ஹெப்படைடிஸ் பி தொற்றால் ஏற்பட்ட சிரோசிஸ் (நாள்பட்ட கல்லீரல் நோய்) மற்றும் ஹெப்படோசெல்லுலர் கார்சினோமா ஆகியவற்றால் 8 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்தது.
தாமதிக்கவேண்டாம்!

ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

ஹெப்படைடிஸ் பி என்றால் என்ன?

ஹெப்படைடிஸ் பி என்பது ஹெப்படைடிஸ் பி வைரஸால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இது கல்லீரலைப் பாதிக்கிறது மற்றும் கடுமையான (குறுகிய கால) அல்லது நாள்பட்ட (நீண்ட கால) நோயை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளிடையே நீண்டகால தொற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது. ஹெப்படைடிஸ் பி தொற்று உள்ள பெரியவர்களில் 2-6 சதவீதம் பேருக்கு மட்டுமே நீண்டகால நோயை அல்லது தொற்றுநோயை உருவாக்கும் அதே வேளையில், குழந்தைகளைப் பொறுத்தவரையில் இந்த எண்ணிக்கை 90% வரை அதிகமாக இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அறிகுறிகள் இருப்பதில்லை என்றாலும், சிலருக்கு சிரோசிஸ் (நாள்பட்ட கல்லீரல் நோய்) மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கோளாறுகள் உருவாகலாம். இவை ஆபத்தானவை.

ஹெப்படைடிஸ் பி எவ்வாறு பரவுகிறது?

ஹெப்படைடிஸ் பி நோய்த்தொற்றின் ஆபத்து பிறப்பின்போதே தொடங்குகிறது. ஒருவர் ஹெப்படைடிஸ் பி நோயால் பாதிக்கப்படும் சில பொதுவான வழிகள்:

  • பிறக்கும் போது பாதிக்கப்பட்டுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு, (பெரினேட்டல் டிரான்ஸ்மிஷன்)
  • பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் இரத்தத்துடன் தொடர்பு ஏற்படுவதால்
  • பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் டூத்பிரஷ்கள் அல்லது கத்திகள் போன்றவற்றைப் பகிர்வதால்
  • பகிரப்படும் ஊசிகள், சிரிஞ்ச்கள் மற்றும் பிற உபகரணங்கள்
  • பாதிக்கப்பட்டுள்ள இணையர் மூலம் பாலியல் தொடர்பால்

தாய்ப்பாலூட்டுதல், கட்டிப்பிடித்தல், இருமல், தும்மல், கைகளைப் பிடித்தல் அல்லது பகிரப்பட்ட பாத்திரங்கள், உணவு அல்லது தண்ணீர் மூலம் வைரஸ் பரவாது.

ஹெப்படைடிஸ் பி அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள்

நோய்த்தொற்றின் ஆரம்ப நாட்களில், ஒருவருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. கடுமையான நோய் உள்ளவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் உருவாகலாம்:

  • மஞ்சள் காமாலை (மஞ்சள் தோல் மற்றும் கண்கள்)
  • வாந்தி
  • வயிற்று வலி
  • குமட்டல் (வயிற்றில் கோளாறு, வாந்தி எடுக்க வேண்டும் என்பது போல் உணர்வு)
  • சோர்வு (அதிக சோர்வு அல்லதுகளைப்பு)
  • அடர் சிறுநீர்

இந்த அறிகுறிகள் பல வாரங்களுக்கு நீடிக்கும். சில சந்தர்ப்பங்களில், கடுமையான ஹெப்படைடிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம். இது ஆபத்தானது.

ஹெப்படைடிஸ் பிக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும்?

ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி அட்டவணைகள் மிகவும் நெகிழ்வானவை, பல விருப்பங்களை வழங்குகின்றன.

இவற்றில் அடங்கும்:

பிறப்பு, 6 மற்றும் 14 வாரங்கள்

பிறப்பு, 6 வாரங்கள், 6 மாதங்கள்

பிறப்பு, 6 வாரங்கள், 10 வாரங்கள், 14 வாரங்கள்

ஹெப்படைடிஸ் பி தடுப்பூசிகள் தனித்தனியாகவோ அல்லது தொகுதியகவோ கிடைக்கின்றன. போடத் தவறினால், ஹெப்படைடிஸ் பிக்கான கேட்ச்சப் தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்

ஹெப்படைடிஸ் பி தடுப்பூசியுடன் தொடர்புடைய பாதகமான விளைவுகள்

ஹெப்படைடிஸ் பி தடுப்பூசியுடன் தொடர்புடைய சில பொதுவான பாதகமான விளைவுகள், (இவை மட்டுமே அல்ல):

  • தலைவலி
  • காய்ச்சல்
  • ஊசி போட்ட இடத்தில் சிவத்தல் அல்லது புண்

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைk கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஹெப்படைடிஸ் ஏ தடுப்பூசி ஹெப்படைடிஸ் பி தொற்றில் இருந்து பாதுகாக்குமா?

இல்லை, ஹெப்படைடிஸ் ஏ தடுப்பூசி ஹெப்படைடிஸ் பி தொற்றுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்காது. ஹெப்படைடிஸ் பி தடுப்பூசியைத் தனியாகப் போடுவது நல்லது.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker