You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b (எச்ஐபி) என்ற பாக்டீரியா முக்கியமாகக் குழந்தைகளைப் பாதித்து நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b (எச்ஐபி) தடுப்பூசி மூலம் எச்ஐபி தொற்றைச் சிறப்பான முறையில் தடுக்க முடியும்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • உலக அளவில், 2000 ஆம் ஆண்டில், எச்ஐபி தொற்று காரணமாக சுமார் 70-80 லட்சம் கடுமையான நோய் பாதிப்புகள் மற்றும் 3.5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • குழந்தை பிறந்து 4 முதல் 18 மாதங்கள் வரை எச்ஐபி நோய் சுமை அதிகமாக இருக்கும்.
தாமதிக்கவேண்டாம்!

ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசி ஆலோச்னை பெறுங்கள்

ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b என்றால் என்ன?

ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b என்பது பாக்டீரியா ஆகும், இது லேசானது முதல் தீவிரமானது வரை பல்வேறு தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். எச்ஐபி தொற்று ஏற்படக்கூடிய சில பொதுவான நிலைமைகள்:

  • காது தொற்று
  • பிராங்கிட்டிஸ் (இருமல், மூச்சுத் திணறல் போன்றவற்றை உண்டாக்கும் மூச்சுக்குழாய் தொற்று)
  • பாக்டீரியா மூளைக்காய்ச்சல் (முதுகெலும்பு மற்றும் மூளையின் பாதுகாப்பு சவ்வுகளின் வீக்கம்)
  • நிமோனியா மூளை பாதிப்பு
  • இரத்தம், மூட்டுகள் அல்லது எலும்பு தொற்றுகள்

எச்ஐபி எவ்வாறு பரவுகிறது?

ஒருவரின் மூக்கு மற்றும் தொண்டையில் பாக்டீரியாக்கள் உள்ளன, மேலும் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும் அவை கேரியராக இருக்கலாம். நோய்வாய்ப்பட்டவரின் தும்மல் அல்லது இருமல் மூலமாக பாக்டீரியா பரவலாம். ஒரு கேரியருடன் நீண்ட நேரம் தொடர்புகொள்வது தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

எச்ஐபி நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் என்ன?

நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b பாக்டீரியா பல நோய்கள் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உதாரணத்திற்கு:

நிமோனியா - இது ஒரு கடுமையான சுவாசத் தொற்று ஆகும், இது முக்கியமாக நுரையீரலை பாதிக்கிறது

சில அறிகுறிகள்:

  • குளிர்காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
  • வியர்வை
  • நெஞ்சு வலி
  • தலைவலி
  • தசை வலி அல்லது வேதனைகள்
  • அதிக சோர்வு

பாக்டீரியா மூளைக்காய்ச்சல் - இது மூளை மற்றும் தண்டு வடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மென்படலத்தின் வீக்கம் ஆகும். இது ஒரு தீவிர உயிருக்கு ஆபத்தான நிலை. இது நிரந்தர இயலாமை அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்
சில அறிகுறிகள்:

  • காய்ச்சல்
  • தலைவலி
  • கழுத்து விறைப்பு
  • குமட்டல்
  • ஃபோட்டோஃபோபியா (ஒளி பற்றிய பயம் அல்லது உணர்திறன்)
  • குழப்ப நிலை

இரத்த ஓட்ட நோய்த்தொற்றுகள் - இது இரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குறிக்கிறது. சில அறிகுறிகள்

  • குளிர் காய்ச்சல்
  • அதிக சோர்வு
  • வயிற்றில் வலி
  • வாந்தியுடன் அல்லது வாந்தி இல்லாமல் குமட்டல்
  • வயிற்றுப்போக்கு
  • பதற்றம்
  • மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
  • மன நிலை மாற்றம் (குழப்பம்)

ஒரு குழந்தைக்கு ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b (எச்ஐபி) தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

குழந்தையின் வயதைப் பொறுத்து எச்ஐபி தடுப்பூசி அட்டவணை மாறுபடும்.
6 மாதங்களுக்கும் குறைவு: 3 பிரைமரி (குறைந்தது 1 மாத இடைவெளி) மற்றும் 16-18 மாதங்களில் 1 பூஸ்டர்.

6 -12 மாதங்கள்: 2 பிரைமரி (குறைந்தது 1 மாதம் இடைவெளி) மற்றும் 16-18 மாதங்களில் 1 பூஸ்டர்.

12-15 மாதங்கள்: 1 டோஸ் மற்றும் தொடர்ந்து 16-18 மாதங்களில் பூஸ்டர்.

15 மாதங்கள் - 5 ஆண்டுகள்: 1 டோஸ் போதுமானதாக இருக்கலாம்.

எச்ஐபி தடுப்பூசிகள் தனியாகவோ அல்லது பிறவற்றுடன் சேர்ந்தோ கிடைக்கின்றன. வெவ்வேறு தடுப்பூசிகள் வெவ்வேறு அட்டவணைகளைக் கொண்டிருக்கலாம், மேலும் தகவலுக்கு உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

எச்ஐபி தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகள்

எச்ஐபி தடுப்பூசியின் சில பக்க விளைவுகள் பின்வருமாறு:

  • ஊசி போட்ட இடத்தில் சிவப்பு, சூடு அல்லது வீக்கம்
  • காய்ச்சல்

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எச்ஐபி நோய்த்தொற்றிலிருந்து எனது குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐபி தொற்று ஏற்படுகிறது. ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு தெரிந்த வழிகளில் ஒன்று தடுப்பூசியாகும். மேலும், எச்ஐபி ஒருவரையே ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கலாம். எனவே, ஒருவர் இதற்கு முன்பு ஒரு முறை பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட அவருக்கும் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker