You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

விஷக்காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) ஒரு வைரஸ் நோயாகும். இது ஒரு தொற்றுநோயும் கூட. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றின் அனைத்து வகைப் பாதிப்புகளில் இருந்தும் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்பது தெரியகிறது.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • இன்ஃப்ளூயன்ஸா சளியிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அறிகுறிகள் பொதுவாக திடீரென்று தோன்றும் மற்றும் மிகவும் கடுமையாக இருக்கும்.
  • தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைகிறது, எனவே விஷக்காய்ச்சலைத் தடுக்க ஆண்டுதோறும் தடுப்பூசி தேவைப்படுகிறது.
தாமதிக்கவேண்டாம்!

இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

இன்ஃப்ளூயன்ஸா என்றால் என்ன?

இன்ஃப்ளூயன்ஸா, பொதுவாக விஷக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு தொற்று நோயான இது வைரல் சுவாச நோயாகும். பொதுவாக மூக்கு, தொண்டை அல்லது நுரையீரலை பாதிக்கிறது. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும்.

இன்ஃப்ளூயன்ஸா எவ்வாறு பரவுகிறது?

பாதிக்கப்பட்ட நபரில் இருந்து பரவும் திரவத்துளிகள் மூலமே முக்கியமாக இன்ஃப்ளூயன்ஸா பரவுகிறது. குறைந்தபட்சம் ஆறு அடி தூரத்தில் இருந்து இந்தத் தொற்று ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இருக்கும் மேற்பரப்பை ஒருவர் தொடும்போதும் தொற்றுகள் ஏற்படலாம். இது உங்கள் கை, வாய் அல்லது மூக்கிலிருந்து சில சமயங்களில் கண்கள் வழியாகவும் பரவலாம்.

அறிகுறிகள் ஒருவருக்குத் தொடங்கும் முன்னரே, அவர் கேரியராக மாறி மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்பலாம்.

இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் என்ன?

இன்ஃப்ளூயன்ஸா என்பது சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு நோயாகும். அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும்.மரணம் கூட ஏற்படலாம். இன்ஃப்ளூயன்ஸாவின் சில பொதுவான அறிகுறிகள்:

  • இருமல்
  • மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல்
  • தொண்டைவலி
  • காய்ச்சல்
  • குளிர்
  • சோர்வு
  • தலைவலி
  • தசை அல்லது உடல் வலி

இந்த அறிகுறிகள் சில நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும்.

மிகவும் கடுமையான நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு நிமோனியா போன்ற சிக்கல்கள் உருவாகலாம். இது ஆபத்தானது. இன்ஃப்ளூயன்ஸா தொற்று மூளையழற்சி, மாரடைப்பு, பல உறுப்புகள் செயலிழத்தல் மற்றும் போன்ற சிக்கல்களைத் தூண்டுவதாகவும் அறியப்படுகிறது.

விஷக்காய்ச்சல் என்பது சளி போன்றது அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், காய்ச்சல் ஒரு பொதுவான அறிகுறியாக இருந்தாலும், இன்ஃபுளுயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது ஏற்படாது.

ஒரு குழந்தைக்கு இன்ஃபுளுயன்ஸா தடுப்பூசி எப்போது போட வேண்டும்?

குழந்தைகளுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பின்வருமாறு போடப்படுகிறது:

1 ஆண்டுக்கு கீழே:

இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை 6 மாதங்களுக்குப் பிறகு, 2 டோஸ்கள் 4 வார இடைவெளியில் போட வேண்டும்.

1 ஆண்டுக்கு மேல்:

5 வயது வரை, ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி அனைவருக்கும் போட வேண்டும்.

5 வயதுக்குக் கீழ் மற்றும் அதற்கு மேல் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகள்

இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியுடன் பொதுவாக தொடர்புடைய பக்க விளைவுகள் அனைவரையும் பாதிக்காது. பொதுவாக காணப்படும் சில பக்க விளைவுகள்.

  • தலைவலி
  • காய்ச்சல்
  • குமட்டல்
  • தசை வலி
  • கிறக்கம் அல்லது மயக்கம்,

அதுமட்டுமின்றி, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போடும்போது, போடப்பட்ட இடத்தில் வீக்கம் அல்லது புண் ஏற்படலாம். இருப்பினும், பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால், அவை ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

  • சொறி
  • பலவீனம்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • இதயத் துடிப்பு
  • மூச்சுத்திணறல்

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இன்ஃப்ளூயன்ஸா தொற்றை எவ்வாறு தடுப்பது?

இன்ஃப்ளூயன்ஸாவுக்காக தடுப்பூசி போடுவது அதைத் தடுப்பதற்கான வழியாகும். அதிலிருந்து பாதுகாக்க உதவும் இன்னும் சில நடைமுறைகள் இங்கே உள்ளன:

  • காய்ச்சல் நோயாளிகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்கவும். குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளியை பராமரிக்கவும்.
  • தும்மும் அல்லது இருமும் போது, ​​உங்கள் வாயை துணியால் அல்லது கைக்குட்டையால் மூடவும்.
  • சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும்.
  • உங்கள் முகம் மற்றும் காதுகளைத் தொட வேண்டாம்.

உங்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று ஏற்பட்டால், பின்வருவனவற்றைக் கடைபிடியுங்கள்:

  • மக்களுடன் தொடர்பு கொள்ளுவதைத் தவிர்க்கவும்
  • உங்கள் சுற்றுப்புறங்களையும், நீங்கள் தொட்ட அனைத்து மேற்பரப்புகளையும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • காய்ச்சல் குறைந்த பின் குறைந்தபட்சம் 24 மணிநேரம் வீட்டிலேயே இருங்கள்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker