You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

கடுமையான ஒரு வைரஸ் நோயான தட்டம்மையை தட்டம்மைத் தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) மூலம் தடுக்கலாம்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • தட்டம்மை நோயிலிருந்து பாதுகாக்க உதவும் தடுப்பூசிகள் அம்மைக்கட்டு மற்றும் ரூபெல்லாவுடன் இணைந்து ஒரு தொகுதியாகக் கிடைக்கின்றன.
  • தடுப்பூசி போடப்படாத சிறு குழந்தைகளே தட்டம்மை தொற்றுக்கும் மரணம் உட்பட அதன் சிக்கல்களின் ஆபத்தில் இருக்கும் மிகப்பெரிய குழுவினர் ஆவர்.
தாமதிக்கவேண்டாம்!

தட்டம்மை தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

தட்டம்மை என்றால் என்ன?

மிக அதிக அளவில் பரவும், தீவிரமான வைரஸ் நோயே தட்டம்மை. இது சுவாசக் குழாயைப் பாதித்து உடல் முழுவதும் பரவுகிறது.

தட்டம்மை எவ்வாறு பரவுகிறது?

பாதிக்கப்பட்ட நபர்கள் இருமும்போதும் தும்மும் போதும் அல்லது நேரடி தொடர்பின் மூலமும் சுவாச நீர்த்துளிகள் வழியாகத் தட்டம்மை பரவுகிறது.

தட்டம்மையின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் என்ன?

தட்டம்மை நோயின் முதல் அறிகுறி பொதுவாக அதிக காய்ச்சல் ஆகும். அதைத் தொடர்ந்து காணப்படும் பிற அறிகுறிகள்:

  • பொதுவாக முகம் மற்றும் மேல் கழுத்தில் சொறி. இது கைகள் மற்றும்
  • கால்களுக்கு பரவும்
  • இருமல்
  • மூக்கொழுகுதல்
  • சிவப்பான, நீர் ஒழுகும் கண்கள்
  • கன்னங்களுக்குள் சிறு வெள்ளைப் புள்ளிகள்

  • பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது 30 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு கடுமையான சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த சிக்கல்களில் பின்வருவன அடங்கும்:

  • குருட்டுத்தன்மை
  • மூளையழற்சி (மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் தொற்று)
  • கடுமையான வயிற்றுப்போக்கும் தொடர்புடைய நீர்ச்சத்திழப்பும்
  • காது நோய்த்தொற்றுகள் அல்லது நிமோனியா போன்ற கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள்
ஒரு குழந்தைக்கு தட்டம்மைத் தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) எப்போது போட வேண்டும்?

குழந்தைகளுக்கு மூன்று டோஸ் போட வேண்டும்:

  • 9 மாத வயதில் முதல் டோஸ்
  • 15 மாத வயதில் 2வது டோஸ்
  • 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் 3வது டோஸ்

3 வது டோஸ் முந்தைய டோஸுக்கு 8 வாரங்களுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் அளிக்கப்படலாம்.

கேட்ச்சப் தடுப்பூசி:

  • தட்டம்மைத் தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) பெறாத பள்ளிசெல்லும் வயதுக் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அனைவருக்கும் 2 டோஸ் கொடுக்க வேண்டும்
  • அவர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டிருந்தால், ஒரே ஒரு டோஸ் மட்டுமே கொடுக்க வேண்டும்
  • 2 டோஸ்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளி 4 வாரங்களாக இருக்க வேண்டும்

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

  • காய்ச்சல்
  • சிறு சொறி
  • மூட்டுகளில் தற்காலிக வலி மற்றும் விறைப்பு

பக்க விளைவுகளில் வலிப்புக்கு வழிவகுக்கும் அதிக காய்ச்சல் அரிதாக ஏற்படலாம்.
பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தட்டம்மை நோயிலிருந்து எனது குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

தட்டம்மை நோயில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பயனுள்ள வழிகளில் தட்டம்மை தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) ஒன்றாகும்.

யாருக்கெல்லாம் ஆபத்து இருக்கிறது?

பெரும்பாலும் தடுப்பூசி போடப்படாத இளம் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம். கர்ப்பிணிப் பெண்கள்* மற்றும் தடுப்பூசி போடப்படாத அல்லது தடுப்பூசிக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாதவர்கள் போன்றோரும் நோய் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர்.

*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன் எம்எம்ஆர் தடுப்பூசி போட வேண்டும்.

யார் யாருக்கெல்லாம் எம்எம்ஆர் தடுப்பூசி போடக்கூடாது?
  • முதலில் தட்டம்மைத் தடுப்பூசி போட்ட போது அல்லது தடுப்பூசியின் ஏதேனும் குறிப்பிட்ட கூறுகளுக்கு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • தட்டம்மை தடுப்பூசி போடும் நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்.
  • தடுப்பூசி பெறுபவருக்கு பின்வருபவை இருந்தால் மருத்துவரிடம் கேட்கவும்:

1. எச்.ஐ.வி/எய்ட்ஸ் அல்லது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் வேறு ஏதேனும் நோய் இருந்தால்
2. ஸ்டெராய்டுகள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளுடன் 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டால்
3. எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்
4. மருந்துகள் அல்லது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் சிகிச்சை செய்யப்பட்டு வந்தால்
5. சமீபத்தில் இரத்தமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அல்லது பிற இரத்தப் பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தால்

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள்.

*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு தட்டம்மைத் தடுப்பூசி போட வேண்டும்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker