You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

இது கக்குவான் இருமல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பரவும் சுவாசத் தொற்று நோய். இதைத் தடுப்பூசி மூலம் தடுக்க முடியும்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • குழந்தைகளுக்குப் பெர்டூசிஸ் ஏற்படுவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த வயதுடைய குழந்தைகளுக்கு நோய் மற்றும் இறப்புக்கு இது ஒரு குறிப்பிடத்தக்கக் காரணமாகும்.
  • பெர்டூசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1 வயதுக்கு குறைவான குழந்தைகளில் பாதிப் பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது
தாமதிக்கவேண்டாம்!

பெர்டூசிஸ் தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்

பெர்டூசிஸ் என்றால் என்ன?

பெர்டூசிஸ் என்பது பார்டர்டெல்லா பெர்டூசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் சுவாசத் தொற்று நோய் ஆகும். இந்நோய் பெரும் அளவில் பரவக்கூடியது. நமது மேல் சுவாசக் குழாயில் காணப்படும் முடி போன்ற சிறிய அமைப்புகளான சிலியாவில் பாக்டீரியா ஒட்டிக்கொண்டு சிலியாவை சேதப்படுத்தும் நச்சுகளை வெளியிடுகிறது.

பாதிக்கப்பட்டவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருமல் ஏற்படலாம். இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த நோய் ஆபத்தானது.

பெர்டூசிஸ் எவ்வாறு பரவுகிறது?

பெர்டூசிஸ் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவரின் சுவாசத் துளி அல்லது அவர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது இது தொற்றும். இது பொதுவாக இருமல், தும்மல் அல்லது நெருங்கியத் தொடர்பு மூலம் பரவுகிறது. இருமல் தொடங்கிய பின் 2 வாரங்கள் வரை பாதிக்கப்பட்ட நபர்கள் தொற்றைப் பரப்புவர்களாக இருப்பார்கள்.

குழந்தையைப் பராமரிப்பவர்கள், பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்கள் போன்ற குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் கேரியர்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இவர்கள் அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கலாம்.

பெர்டூசிஸின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள்

தொற்று ஏற்பட்ட பின்னர் பெர்டூசிஸின் அறிகுறிகள் வெளிப்பட 5 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம். சில சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் மூன்று வாரங்கள் வரை தோன்றாது.

பெர்டூசிஸின் ஆரம்ப அறிகுறிகள் ஜலதோஷத்தைப் போலவே தோன்றும். இவை 1 முதல் 2 வாரங்கள் வரை நீடிக்கும். டிசிசி-யின்படி, சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • மூக்கு ஒழுகுதல்
  • குறைந்த அளவு காய்ச்சல்
  • அவ்வப்போது லேசான இருமல்
  • மூச்சுத்திணறல் - தூங்கும்போது சுவாசிப்பதில் சிரமம் (பொதுவாகக் குழந்தைகளுக்கு)

அடுத்த கட்டத்தில், பின்வரும் அறிகுறிகள் உருவாகலாம்:

  • துரிதமான தொடர் இருமல் (பராக்ஸிஸ்ம்ஸ்) அதைத் தொடர்ந்து 'ஊப்' ஒலி
    வாந்தி
  • இருமலுக்குப் பின் ஏற்படும் சோர்வு
  • தொடர் இருமல் சுமார் 10 வாரங்கள் வரை நீடிக்கும். இருமல் மென்மையாகவும் எப்போதாவது இருக்குமானால் அது குணமாகும் அறிகுறிகளில் ஒன்றாகும்.

ஆனால் மெதுவாகக் குணம் ஆகலாம்.

சிசுக்களுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக நிமோனியா ஏற்படக்கூடும்.

ஆனால் வலிப்பும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் அரிதாகவே நிகழ்கின்றன.

ஒரு குழந்தைக்கு எப்போது பெர்டூசிஸ் தடுப்பூசி போட வேண்டும்?

டெட்டனஸ் மற்றும் டிஃப்தீரியாவுடன் இணைந்து பெர்டுசிஸ் தடுப்பூசி கிடைக்கிறது. இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஐஏபி) தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவின் (ஏசிவிஐபி) படி, தடுப்பூசி பின்வரும் வயதுகளில் மூன்று டோஸ்களாக அளிக்கப்படுகிறது:

  • 6 வாரங்கள்
  • 10 வாரங்கள்
  • 14 வாரங்கள்

மேலும், பூஸ்டர் டோஸ்கள் 16-18 மாதங்கள் மற்றும் 4-6 வயதுகளில் கொடுக்கப்பட வேண்டும்.

டிடேப் (ரெட்யூஸ்ட் ஆண்டிஜென் கம்பைண்ட் டெட்டனஸ், டிஃப்தீரியா மற்றும் ஏசெல்லுலார் பெர்டூசிஸ்) 10-12 வயதில்.

பெரியவர்களுக்கும் பூஸ்டர் டோஸ்கள் (Tdap) தேவை.

மேலும் தகவலுக்கு உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.


இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

பெர்டூசிஸ் தடுப்பூசியுடன் தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் யாவை?

பெர்டுசிஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட இடத்தில் புண், சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கர்ப்ப காலத்தில் பெர்டூசிஸ் தடுப்பூசி போட வேண்டுமா?

பிறந்த முதல் சில வாரங்களில் குழந்தைகள் பெர்டூசிஸ் நோயால் பாதிக்கப்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் பெர்டூசிஸுக்குத் தடுப்பூசி போடலாம், இதன் மூலம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே தங்கள் குழந்தைக்கு ஆன்டிபாடிகளை அனுப்ப முடியும்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker