You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

பேக்டீரியம் ஸ்ட்ரெப்டோகோக்கஸால் ஏற்படும் தொற்றுகள் நியூமோகோக்கல் நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நோய்களைத் தடுக்கும் ஒரு தெரிந்த வழி நியூமோகோக்கல் தடுப்பூசிகள்தாம்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நியூமோகோக்கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • தடுப்பூசியால் தடுக்கப் பட்டிருக்கக்கூடிய இறப்புகளுக்கு நியூமோகோக்கல் நோய் முதல் காரணமாகும்.
தாமதிக்கவேண்டாம்!

நியூமோகோக்கல் தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

நியூமோகோக்கல் நோய் என்றால் என்ன?

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பொதுவாக நியூமோகோக்கல் நோய்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் நிமோனியா, செப்டிசீமியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் முதற்கொண்டு குறைந்த தீவிரமுள்ளவையும் ஆனால் பொதுவான நோய்த்தொற்றுகளான சைனஸைடிஸ் மற்றும் ஓடிடிஸ் மீடியா (நடுக் காது நோய்த்தொற்றுகள்) ஆகியவை வரை அடங்கும்.

நியூமோகோக்கல் நோய் எவ்வாறு பரவுகிறது?

நியூமோகோக்கல் பாக்டீரியாக்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் சுவாசத் துளிகள் மற்றும் உமிழ்நீர் அல்லது சளி போன்ற சுரப்புகளின் மூலம் பரவுகின்றன.

குறிப்பாகக் குழந்தைகள் உடபட பலர், இந்தப் பாக்டீரியாவின் அறிகுறியற்ற கேரியர்கள் ஆவர். இவர்கள் இந்த நோயை மற்றவர்களுக்குப் பரப்பலாம்.

நியூமோகோக்கல் நோயின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் என்னென்ன?

உடலின் பாகத்தைப் பொறுத்தது நியூமோகோக்கல் நோயின் அறிகுறிகள் அமையும் .அவை லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். அறிகுறிகள் கீழே குறிப்பிட்டுள்ளபடி நோய்த்தொற்றின் வகையைச் சார்ந்தது (இவை மட்டுமே அல்ல):

நிமோனியா (நுரையீரல் தொற்று)

  • காய்ச்சல் மற்றும் குளிர்
  • சுவாசிப்பதில் சிரமம் அல்லது விரைவான சுவாசம்
  • இருமல்
  • நெஞ்சு வலி

மூளைக்காய்ச்சல் (மூளைப் புறணி மற்றும் தண்டு வடத் தொற்று)

  • கழுத்தில் விறைப்பு
  • காய்ச்சல்
  • தலைவலி
  • ஒளிக்கூச்சம்
  • மனக்குழப்பம்

பாக்டீரியா (இரத்தத் தொற்று)

  • குளிர்
  • காய்ச்சல்
  • கவனம் குறைதல்

செப்சிஸ் (தொற்றுநோய்க்கான தீவிர எதிர்வினை)

  • திசைதிருப்பல் அல்லது குழப்பம்
  • மூச்சடைப்பு
  • காய்ச்சலும் நடுக்கமும்
  • நனைந்த, வியர்க்கும் தோல்
  • அதிக இதயத்துடிப்பு வீதம்
  • அதிக வலி அல்லது அசௌகரியம்

நடுக் காது தொற்று (ஓடிடிஸ் மீடியா)

  • காது வலி
  • சிவந்து வீங்கிய செவிப்பறை
  • காய்ச்சல்
  • தூக்கக்கிறக்கம்

சைனஸ் தொற்று

  • தலைவலி
  • ஒழுகும் அல்லது அடைத்த மூக்கு
  • நுகரும் உணர்வு இழத்தல்
  • முகத்தில் வலி அல்லது அழுத்தம்
  • பின்மூக்கு திரவம் வடிதல்
நியூமோகோக்கல் நோயில் இருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

நியூமோகோக்கல் தடுப்பூசி என்பது நியூமோகோக்கல் நோயைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க அல்லது தொற்று பரவாமல் தடுக்க உதவும் பிற வழிகள்:

  • தும்மும் போதும் இருமும் போதும் வாயை மூடுதல்
  • தொடர்ந்து கைகளைக் கழுவுதல்
  • தாய்ப்பாலூட்டுதல்
  • புகை இல்லாத சுற்றுச்சூழல்
நியூமோகோக்கல் நோய்களுக்கான தடுப்பூசியை ஒரு குழந்தைக்கு எப்போது போட வேண்டும்?

நியூமோகோக்கல் நோய்களுக்கான தடுப்பூசி 6 வாரங்களில் இருந்து தொடங்குகிறது.

வெவ்வேறு தடுப்பூசிகள் வெவ்வேறு தடுப்பூசி அட்டவணைகளைக் கொண்டுள்ளன. மேலும் தகவலுக்கு உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

நியூமோகோக்கல் தடுப்பூசியுடன் சம்பந்தப்பட்ட பொதுவான பக்க விளைவுகள் எவை?

எந்தவொரு தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அவை பொதுவாக லேசானவையாக இருக்கும். அவற்றில் சில (ஆனால் இவை மட்டுமே அல்ல):

  • சிவப்பு
  • வீக்கம்
  • தடுப்பூசி போட்ட இடத்தில் வலி
  • காய்ச்சல்
  • பசியின்மை
  • தலைவலி
  • குளிர்

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் நோய் எவ்வளவு தீவிரமானது?

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு நியூமோகோக்கல் நோய் முக்கிய காரணமாகும், மேலும் இது உயிருக்கு ஆபத்தான நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker