You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

ரூபெல்லா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயே ரூபெல்லா. ரூபெல்லா தடுப்பூசி (எம்எம்ஆர் ) மூலம் இதைத் தடுக்க முடியும்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • ரூபெல்லாவிலிருந்து பாதுகாக்க உதவும் தடுப்பூசிகள் அம்மைக்கட்டு மற்றும் தட்டம்மை தடுப்பூசியுடன் இணைந்து வழங்கப்படுகின்றன
தாமதிக்கவேண்டாம்!

ரூபெல்லா தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

ரூபெல்லா என்றால் என்ன?

ஜெர்மன் தட்டம்மை என்றும் இது அழைக்கப்படுகிறது. ரூபெல்லா ஒரு பரவும் வைரஸ் தொற்று நோய். பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. இது ஜெர்மன் தட்டம்மை என்று அழைக்கப்பட்டாலும், அம்மை நோயை விட வேறுபட்ட வைரஸால் ஏற்படுகிறது.

தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய பிறப்பு குறைபாடுகளுக்கு இது முக்கியக் காரணமாகும்.

ரூபெல்லா எவ்வாறு பரவுகிறது?

பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதே இருமும் போதே காற்றில் பரவும் துளிகள் மூலமே ரூபெல்லா பெரும்பாலும் பரவுகிறது.

அது மட்டும் அல்லாமல், ரூபெல்லா நோய்த்தொற்று உள்ள கர்ப்பிணிப் பெண்கள் அதை உருவாகி வரும் தங்கள் குழந்தைகளுக்கு கடத்துவதாக தெரிகிறது.

ரூபெல்லாவின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் எவை?

இந்த நோய் பொதுவாக குழந்தைகளை லேசாகப் பாதிக்கிறது. அறிகுறிகள் பின்வருமாறு இருக்கும்:

  • ஒரு சொறி, முகத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவும்
  • குறைந்த அளவுக் காய்ச்சல்
  • தொண்டை வலி
  • லேசான கண் தொற்று
  • குமட்டல்

சில சற்று வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சொறி தோன்றுவதற்கு முன்பு தலைவலி மற்றும் பொதுவான அசௌகரியம் ஏற்படலாம்.

பாதிக்கப்பட்ட பெரியவர்கள், பெரும்பாலும் பெண்களுக்கு மூட்டுவலி அல்லது மூட்டழற்சி உருவாகலாம், இது சுமார் 3-10 நாட்கள் நீடிக்கும்.

சிக்கல்கள்
ரூபெல்லா தொற்று ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு அல்லது வளரும் குழந்தைக்கு கடுமையான பிறப்பு குறைபாடுகள் போன்ற கடுமையான தீங்கை விளைவிக்கும். இது ரூபெல்லாவின் மிகவும் கடும் சிக்கலாகும்.

பிறவி ரூபெல்லா நோய்க்குறியும் (சிஆர்எஸ்) ரூபெல்லாவால் ஏற்படும் சிக்கலே.
சிஆர்எஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு இது செவித்திறன்

குறைபாடுகள், கண் மற்றும் இதயத்தில் குறைபாடுகள் மற்றும் ஆட்டிசம், நீரிழிவு நோய், தைராய்டு செயலிழப்பு உள்ளிட்ட வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் குறைபாடுகள் கொண்ட சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

மேற்கூறியவற்றில் பலவற்றிற்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் பிற பராமரிப்பு அளிக்க அதிகச் செலவு ஏற்படும்.

ஒரு குழந்தைக்கு எப்போது ரூபெல்லா தடுப்பூசி (எம் எம் ஆர்) இட வேண்டும்?

குழந்தைகள் மூன்று டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்:

  • 9 மாதத்தில் முதல் டோஸ்
  • 15 மாதத்தில் வயதில் 2வது டோஸ்
  • 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் 3வது டோஸ்

3 வது டோஸ் முந்தைய டோஸுக்கு 8 வாரங்களுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் அளிக்கப்படலாம்.

கேட்சப் தடுப்பூசி:

  • ரூபெல்லா தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) போட்டுக்கொள்ளாத பள்ளிசெல்லும் வயதுடைய குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினர் அனைவருக்கும் 2 டோஸ் கொடுக்க வேண்டும்.
  • அவர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டிருந்தால், ஒரே ஒரு டோஸ் மட்டுமே போட வேண்டும்
  • 2 டோஸ்களுக்கு இடையிலான குறைந்தபட்ச இடைவெளி 4 வாரங்கள் இருக்க வேண்டும்

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

ரூபெல்லா தடுப்பூசியுடன் (எம்எம்ஆர் தடுப்பூசி) தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் என்ன?

பெரும்பாலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் பக்க விளைவுகள் ஏற்படாது. பக்க விளைவுகள், ஏதேனும் இருந்தால், பெரும்பாலும் லேசானவையாகவும் பின்வருவனவற்றை உள்ளடக்கியும் இருக்கலாம்:

தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் புண், வீக்கம் அல்லது சிவப்பு

  • காய்ச்சல்
  • சிறு சொறி
  • மூட்டுகளில் தற்காலிக வலி மற்றும் விறைப்பு

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரூபெல்லா எவ்வளவு தூரத்துக்குத் தீவிரமானது?

தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய பிறப்பு குறைபாடுகளுக்கு இது முக்கிய காரணமாகும். கர்ப்பிணிப் பெண்களில் *, கரு இறப்பு அல்லது பிறவி குறைபாடுகளுக்கு ரூபெல்லா காரணமாக இருக்கலாம்.

தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிப் பெண்ணை ரூபெல்லா வைரஸ் தாக்கினால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது அவரது குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடும்.

கருவில் வளரும் குழந்தைக்குக் பின்வரும் கடுமையான பிறப்பு குறைபாடுகளை உருவாக்கக்கூடிய வைரஸை தாய் கடத்தலாம்:

  • இதயப் பிரச்சனைகள்
  • செவித்திறன் மற்றும் கண்பார்வை இழப்பு
  • அறிவுக் குறைபாடு
  • கல்லீரல் அல்லது மண்ணீரல் பாதிப்பு

கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தொற்று ஏற்பட்டால் இத்தகைய தீவிர பிறப்பு குறைபாடுகள் பொதுவாக ஏற்படலாம். இந்தப் பிறப்புக் குறைபாடுகள் சிஆர்எஸ் அல்லது பிறவி ரூபெல்லா நோய்க்குறி என்று அழைக்கப்படுகின்றன.

*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன் எம்எம்ஆர் தடுப்பூசி போட வேண்டும்.

ரூபெல்லாவுக்கு எந்த வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது?

இதற்கு குறிப்பிட்ட மருந்து அல்லது சிகிச்சை எதுவும் இல்லை. இந்த நோய் பெரும்பாலும் ரூபெல்லா தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது

யார் யாரெல்லாம் எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது?
  • ரூபெல்லா தடுப்பூசியின் முந்திய டோஸ் அல்லது தடுப்பூசியின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கூறுக்குக் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • ரூபெல்லா தடுப்பூசி போடும்போது போது நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்.
  • தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பவருக்குப் பின் வரும் நிலைகள் இருந்தால் மருத்துவரிடம் விசாரிக்கவும்:

1. எச்.ஐ.வி/எய்ட்ஸ் அல்லது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் வேறு ஏதேனும் நோய் இருந்தால்
2. ஸ்டெராய்டுகள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளுடன் 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டால்
3. எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்
4. மருந்துகள் அல்லது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் சிகிச்சை செய்யப்பட்டு வந்தால்
5. சமீபத்தில் இரத்தமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அல்லது பிற இரத்தப் பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தால்

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள்.

*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker