You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானியால் ஏற்படும் பாக்டீரியா தொற்று நோயே லாக்ஜா என்று அழைக்கப்படும் டெட்டனஸ் ஆகும்.

டெட்டனஸ் தடுப்பூசி மூலம் டெட்டனஸ் நோய்த்தொற்றைத் தடுக்கலாம்.

தடுப்பூசி அட்டவணை ஐஏபி-யில் இருந்து எடுக்கப்பட்டது* தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான ஆலோசனைக் குழு நடைமுறைகள் (ஏசிவிஐபி) *இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்
தடுப்பூசியை தவற விட்டுவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?
  • டெட்டனஸை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மண் உட்பட சுற்றுச்சூழலில் உள்ளன. அவை வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் திறந்த காயங்கள் மூலம் உங்கள் உடலுக்குள் நுழையலாம்.
  • பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், அறுவை சிகிச்சை செயல் முறைகள், கூட்டு எலும்பு முறிவுகள் மற்றும் நரம்பு வழியாகப் போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமும் டெட்டனஸ் நோய்த்தொற்று உருவாகலாம்.
தாமதிக்கவேண்டாம்!

டெட்டனஸ் தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

டெட்டனஸ் என்றால் என்ன?

டெட்டனஸை ஏற்படுத்தும் பாக்டீரியாவான க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி மண், உமிழ்நீர், தூசி மற்றும் உரம் ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், நோயாளிக்கு வலிமிகுந்த தசை சுருக்கங்கள் உண்டாகும். குறிப்பாகத் தாடை மற்றும் கழுத்து பகுதியில் இது ஏற்படும். நோயாளிக்கு மூச்சுவிடவும், விழுங்கவும், வாய் மற்றும் கழுத்தை நகர்த்தவும் சிரமமாக இருக்கும் என்பதால் இது லாக்ஜா என்றும் அழைக்கப்படுகிறது.

டெட்டனஸ் எவ்வாறு பரவுகிறது?

டெட்டனஸ் பாக்டீரியாவின் ஸ்போர்கள் பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள சூழலில் உள்ளன. பொதுவாக அசுத்தமான பொருட்களால் ஏற்படும் காயங்கள் மூலம், பாக்டீரியா ஒருவரின் உடலுக்குள் நுழைந்தால் அவர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சிடிசி-யின் படி, பின்வருவனவற்றின் மூலம் க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி தொற்றுநோயை ஏற்படுத்தலாம்:

  • அழுக்கு, மலம் அல்லது உமிழ்நீரால் அசுத்தமடைந்த காயங்கள்
  • ஆணி அல்லது ஊசியால் குத்தப்பட்டு ஏற்படும் காயங்கள்
  • தீக்காயங்கள்
  • கிரஷ் காயங்கள்
  • இறந்த திசுக்களுடனான காயங்கள்

சிடிசி-யின் படி, டெட்டனஸ் பாக்டீரியா உங்களைப் பாதிக்கக்கூடிய சில வழிகள்:

  • மேற்காயங்கள்
  • அறுவை சிகிச்சை முறைகள்
  • பூச்சி கடித்தல்
  • பல் தொற்றுகள்
  • கூட்டு எலும்பு முறிவுகள் ( எலும்பு வெளித்தெரிதல்)
  • நாள்பட்ட புண்கள் மற்றும் தொற்றுகள்
  • நரம்பு வழி (ஐவி) மருந்து செலுத்துதல்
  • தசை வழி செலுத்தப்படும் ஊசி


நோயரும்பும் காலம் (தொற்று ஏற்பட்டு நோயாக வெளிப்படு வதற்கான கால அளவு) 3 முதல் 21 நாட்கள் ஆகும், பெரும்பாலான நேர்வுகள் 10 முதல் 14 நாட்களுக்குள் காணப்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறுகிய நோயரும்பும் காலம் காலம் காணப்படுதல்:

  • மிகவும் கடுமையாக அசுத்தமான காயங்கள்
  • அதிகத் தீவிரமான நோய்

டெட்டனஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது.

டெட்டனஸின் அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள்

டெட்டனஸ் நோய்த்தொற்று பொதுவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி சில பொதுவான அறிகுறிகள் வருமாறு:

  • அசைக்க முடியாத தாடை அல்லது வாய் திறப்பதில் சிரமம்
  • விழுங்குவதில் மற்றும் சுவாசிப்பதில் சிரமங்கள்
  • தசைப்பிடிப்பு, பொதுவாக முதுகு, வயிறு மற்றும் கைகால்களில்
  • வலிப்பு
  • தலைவலி
  • காய்ச்சல் மற்றும் வியர்வை
  • இரத்த அழுத்தம் அல்லது இதய துடிப்பு வீதத்தில் மாற்றங்கள்
  • புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் பாக்டீரியா பாதிக்கலாம். பிறந்த

குழந்தைக்குப் பொதுவாக ஏற்படும் அறிகுறிகளாவன தசைப்பிடிப்பு மற்றும் தாய்ப்பால் அல்லது உறிஞ்சுவதில் சிரமம் ஆகியவை ஆகும். பெரும்பாலும் குழந்தை அழும்.

ஒரு குழந்தைக்கு எப்போது டெட்டனஸ் தடுப்பூசி போட வேண்டும்?

டெட்டனஸ் தடுப்பூசியால் டெட்டனஸ் நோய்க்கு எதிராகப் பாதுகாப்பை வழங்க முடியும். இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஐஏபி) தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவின் (ஏசிவிஐபி) கருத்துப்படி, தடுப்பூசி மூன்று டோஸ்களாகப் போடப்படுகிறது, ஒவ்வொரு டோஸும் பின்வரும் வயதில் போடப்பட வேண்டும்:

  • 6 வாரம்
  • 10 வாரம்
  • 14 வாரங்கள்

மேலும், டெட்டனஸ் தடுப்பூசிக்கான பூஸ்டர் டோஸ்கள் 16-18 மாதங்கள் மற்றும் 4-6 வயதுகளில் போடப்பட வேண்டும்.

டிடேப் (ரெட்யூஸ்ட் ஆண்டிஜென் கம்பைண்ட் டெட்டனஸ், டிஃப்தீரியா மற்றும் ஏசெல்லுலார் பெர்டூசிஸ்) 10-12 வயதில்.

பெரியவர்களுக்கும் பூஸ்டர் டோஸ்கள் (டிடேப்) தேவை.

மேலும் தகவலுக்கு உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்.

இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

டெட்டனஸ் தடுப்பூசியுடன் தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் என்ன?

பல்வேறு தடுப்பூசிகளைப் போலவே, ஊசி போடப்பட்ட இடத்தில் புண், சிவத்தல் அல்லது வீக்கத்தை டெட்டனஸ் தடுப்பூசிகளும் ஏற்படுத்தலாம். வலிப்பு, கோமா, நிரந்தர மூளை பாதிப்பு மற்றும் உணர்வுநிலை மாற்றம் ஆகியவை சில கடுமையான ஆனால் அரிதான பக்க விளைவுகளாகும்.

அப்படிப்பட்ட அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டெட்டனஸ் தொற்று ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏற்படுமா?

ஒருவருக்கு டெட்டனஸ் தொற்று ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஏற்படலாம். டெட்டனஸிலிருந்து குணமடைவதன் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது. ஒருவர் டெட்டனஸிலிருந்து மீண்டிருந்தால், அவருக்குத் தடுப்பூசி போடுவது நல்லது.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker