You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்
கடுமையான நோய்களிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்க உரியநேரத்தில் தடுப்பூசி போடுவது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
டிடிபி - 3

டோஸ்: 3 இல் 3

டிஃப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டூசிஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது

எப்போது போட வேண்டும்:14 வாரங்களில்

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?

டிஃப்தீரியா, டெட்டானஸ் மற்றும் பெர்டூசிஸ் தடுப்பூசிகள் தடுப்பூசி தொகுகளில் (காம்பினேஷன் வேக்சின்ஸ்) சேர்க்கப்பட்டுள்ளன, அவை குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசியின் ஒரு பகுதியாக மற்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

டிஃப்தீரியாவுக்கு எதிரான பாதுகாப்பு - தொற்று பரவுவதைத் தடுக்க டிஃப்தீரியா பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்; சிறந்த முறையில் சுத்தத்தைக் கடைப்பிடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது (உ.ம். இருமும்போதும் தும்மும்போதும் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல்).

டெட்டனஸுக்கு எதிரான பாதுகாப்பு - நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அல்லது கடுமையான காயத்திற்குப் பிறகு டெட்டனஸ் இம்யூனோகுளோபுலின் என்ற சிகிச்சை பெற்றுக்கொண்டால் மட்டுமே டெட்டனஸ் வராமல் பாதுகாக்க முடியும்.

கக்குவான் இருமல் நோய்க்கு எதிரான பாதுகாப்பு - கக்குவான் இருமல் உள்ளவர்கள் நோய் பரவுவதைக் குறைக்க நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் (உ.ம் இருமும்போதும் தும்மும்போதும் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல், கைகளைத் தவறாமல் கழுவுதல்).

ஐபிவி - 3

டோஸ்: 5 இல் 3

நரம்புகளைப் பாதிக்கும் வைரஸ் நோயான போலியோவில் இருந்து பாதுகாக்கிறது.

எப்போது கொடுக்க வேண்டும்: 14 வாரங்களில்

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?

போலியோ தடுப்பூசி தனியாகப் போடப்படலாம் அல்லது குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசியின் ஒரு பகுதியாக மற்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் தடுப்பூசி தொகுதிகளில் (காம்பினேஷன் வேக்சின்ஸ்) சேர்க்கப்படலாம். இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

டோஸ்: 4 இல் 3

ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை B (எச்ஐபி) பாக்டீரியா பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது

எப்போது போட வேண்டும்: 14 வாரங்களில்

டோஸ்: 4 இல் 4

ஹெப்படைடிஸ் பி தொற்று; ஹெப்படைடிஸ் பி வைரஸால் ஏற்படும் கல்லீரல் தொற்று.

எப்போது போட வேண்டும்: 14 வாரங்களில்

உங்கள் குழந்தையைப் பாதுகாக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்?

ஹெப்படைடிஸ் பி தடுப்பூசியைத் தனியாகவோ அல்லது தடுப்பூசித் தொகுதிகளாகவோ போடலாம். இது குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசியின் ஒரு பகுதியாக மற்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

டோஸ்: 3 இல் 3

குடலைப் பாதிக்கும் வைரஸ் நோயான ரோட்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.

எப்போது கொடுக்க வேண்டும்: 14 வாரங்களில்

டோஸ்: 4 இல் 3

நிமோனியா, இடைச்செவியழற்சி, மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோகாக்கால் பாக்டீரியாவால் ஏற்படும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும் நிமோகோகல் நோய்

எப்போது போட வேண்டும்14 வாரங்களில்

தடுப்பூசியைத் தவற விட்டுவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கேட்ச்-அப் தடுப்பூசி

உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி போடுவது பற்றி கலந்தாலோசிக்கலாம்.

பெருந்தொற்றுகளின் போது தடுப்பூசிக்கு முந்தைய பராமரிப்பு

இந்த நேரங்களில் தடுப்பூசி போடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் எவை?

முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கு ஓர் அப்பாய்ண்ட்மெண்ட்டைப் பெற்ற பின்னரே உங்கள் குழந்தை மருத்துவரை சந்திக்கவும்
ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரை அடிக்கடி பயன்படுத்தவும்
கைக்குழந்தைகள் தவிர அனைத்து பராமரிப்பாளர்களும் குழந்தைகளும் முகமூடி அணிய வேண்டும்
எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியைப் பராமரிக்கவும் மற்றும் முடிந்தவரை மேற்பரப்புகளை தொடாமல் இருக்கவும்
பொம்மைகள்/தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள் மற்றும் கதவு கைப்பிடிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும்
மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) தடுப்பூசி போட வருபவர்களுடன் வரக்கூடாது
ஊழியர்களின் ஆலோசனையின்படியே தடுப்பூசி கிளினிக்கின் உள்ளே வரவேண்டும், வெளியே செல்ல வேண்டும் மற்றும் நடந்துகொள்ள வேண்டும்

தடுப்பூசி போட்ட பின் பராமரிப்பு

தடுப்பூசி போட்ட பின் ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்ற உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார். அந்த வழிமுறைகளைக் கவனமாக பின்பற்றவும்.

கூடுதல் உதவிக் குறிப்புகள்

உங்கள் மருத்துவரைச் சந்திப்பதற்கு முன் தடுப்பூசி பற்றிய தகவலை முழுமையாகப் படிக்கவும்

வாரயிறுதியில் தடுப்பூசி போடத் திட்டமிடுங்கள், அதனால் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் போதுமான நேரம் கிடைக்கும்

உங்கள் குழந்தைக்குப் புயங்கள் வெளியில் தெரியும் படையான உடையை அணியுங்கள்.

இதனால் தடுப்பூசி போடும்போது உடையைக் கழற்ற வேண்டிய தேவை ஏற்படாது. உங்கள் குழந்தையைச் சமாதானப்படுத்த அதற்குப் பிடித்த பொம்மையைக் கொண்டு வாருங்கள்

உங்கள் குழந்தைக்குப் புரிந்துகொள்ளும் வயதாய் இருந்தால் தடுப்பூசியின் நன்மைகளை பற்றி விளக்குங்கள்

உங்கள் குழந்தைக்கான முழு தடுப்பூசி அட்டவனையையும் பெறுங்கள்

இப்போதே பதிவிறக்குங்கள்

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker